புதுவை தீயணைப்பு துறையில் முதல் முறையாக பெண்கள்.! முதலமைச்சர் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 1,060 அரசு காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இதில் தீயணைப்புதுறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இந்நிலையில், அனைத்து துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தீயணைப்பு துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை என்பதால், பெண்களுக்கும் தீயணைப்பு துறையில் வாய்ப்பு தர வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகயுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First time women in Puducherry Fire Station approved by Chief Minister


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal