ஒடிசா ரயில் விபத்து || அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக பாலசோர் ரயில்வே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள், மனிதர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து போன்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் ரயில்வே சட்டத்தின் 153, 154 மற்றும் 175 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலசோர் ஜிஆர்பிஎஸ் பப்பு குமார் நாயக் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 337, 338, 304A மற்றும் 34 ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். ரயில் விபத்துக்கு காரணமாக கூறப்பட்ட ஓட்டுனர் பிழை மற்றும் கட்டமைப்பு பிழை ஆகியவற்றை ரயில்வே அமைச்சகம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIR registered on Orissa train accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->