குடியுரிமை பெரும் முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர்: காங்கிரஸ் சோனியா மீது எப்.ஐ.ஆர்., பதிவு..!
FIR registered against Congress Sonia for her name appearing in the voter list before she became a citizen
இந்திய குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றது தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவுசெய்யுமாறு டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை திருமணம் செய்துகொண்டார். அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, அதாவது, 1980-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் மோசடியாக பெயர் சேர்க்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக விகாஷ் திரிபாதி என்பவர் டில்லி ரோஸ் அவென்யூ தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'குடியுரிமை இல்லாத நிலையில், 1980-ஆம் ஆண்டே வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயரை சேர்த்து தேர்தல் முறைகேடு செய்துள்ளார்' என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சோனியா காந்தி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று விகாஷ் திரிபாதி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மனுவை ஏற்று விசாரணை நடத்திய தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் வைபவ் சவுரஸ்லா, உரிய சட்டவிதிகளின் கீழ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதோடு, வழக்கை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
English Summary
FIR registered against Congress Sonia for her name appearing in the voter list before she became a citizen