காதலனுடன் செல்போனில் பேசிய மகள் - தந்தை செய்த கொடூர சம்பவம்.!!
Father kill daughter in uttar pradesh for speech to boy friend in mobile
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டம் அம்பிதா கிராமத்தை சேர்ந்தவர் ஷல்பன். இவருக்கு முஸ்கன் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் பிளஸ் 2 படித்து வரும் முஸ்கன் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்த நிலையில் இது குறித்து முஸ்கனின் தந்தைக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து, முஸ்கனை கண்டித்த அவரது தந்தை இளைஞருடன் பழகுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார். இருப்பினும், இளைஞருடன் முஸ்கன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் முஸ்கன் மீண்டும் தனது காதலனுடன் செல்போனில் பேசியுள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த ஷல்பன் மக்களை தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் முஸ்கன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷல்பனையும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மகனையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Father kill daughter in uttar pradesh for speech to boy friend in mobile