ஜார்கண்ட் : மாவோயிஸ்டுகள் புதைத்த கண்ணிவெடியில் சிக்கி விவசாயி பலி.! மனைவி படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கண்ணிவெடியில் சிக்கி விவசாயி உயிரிழந்துள்ளார் மற்றும் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கோயில்கேரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட இச்சாஹட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணா. இவருடைய மனைவி நந்தினி. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று அப்பகுதியில் உள்ள வனப்பகுதி வழியாக வயலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தவறுதலாக மிதித்ததால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed and wife injured in landmine by maoists blast in jharkhand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->