இலங்கைக்கு உதவாமல் இருந்தால் நமது பொறுப்பை தவிர்த்தபோல் ஆகிவிடும் - ஜெய்சங்கர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவு கொள்கை தொடர்பாக தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். மேலும், அந்த அறிக்கை தொடர்பாக எம்.பி.க்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது:- "நமது அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்ததால், அந்த நாட்டுக்கு பொருளாதார உதவிகள் அளித்தோம். 

இலங்கைக்கு உதவுவதில், நாம் இன கண்ணோட்டத்தை பின்பற்றவில்லை. நமது அண்டை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது, நாம் உதவாமல் இருந்தால், நமது பொறுப்பை தவிர்த்தபோல் ஆகிவிடும்.

சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது உண்மைதான். 

ஏனென்றால், இது நம்முடைய நீண்டகால நிலைப்பாடும் கூட. இதைத்தான் முந்தைய அரசுகளும் பின்பற்றி உள்ளன. இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இதுதான் ஆக்கப்பூர்வமான வழிமுறை. அதையே தொடர்ந்து பின்பற்றுவோம். 

இதைத்தொடர்ந்து, பாலஸ்தீன பிரச்சினையில் இரு நாடுகள் தீர்வை இந்தியா ஆதரித்து, அந்த இரு நாடுகளும் அருகருகே அமைதியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். 

இதையடுத்து, கத்தார் நாட்டில் 100 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளையும், நைஜீரியாவில் சிறையில் உள்ள 16 இந்திய மாலுமிகளையும் மீட்பதற்கு இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

External Affairs Minister Jaishankar approach in srilanga economic problam in rajya shaba


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->