அரிசிகளுக்கு ஏற்றுமதிவரி இன்று முதல் அமலில்...! மத்திய அரசின் அதிரடி முடிவு - Seithipunal
Seithipunal


மத்திய நிதி அமைச்சகம், அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 % ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.

மேலும், இந்த ஏற்றுமதி வரி இன்று முதல் அதாவது  மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.இவ்வகையில் மத்திய நிதி அமைச்சகம், இந்தியாவிலுள்ள மக்களுக்கு தேவையான அளவு அரிசி இருப்பதும், விநியோகமும் தொடர்ச்சியாக இருப்பதையும் உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வரி உடனடியாக அமலுக்கு வருவதாகவும், வரி விதிப்பின் மூலம் உள்நாட்டு சந்தையில் விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய அரசு, கடந்த ஆண்டு அக்டோபரில், 2022 செப்டம்பர் முதல் நடைமுறையிலிருந்த அரிசி ஏற்றுமதிக்கான அனைத்து தடைகளையும் நீக்கியது. அதே நேரத்தில் உடைந்த அரிசி ஏற்றுமதி மீதான தடையையும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது.

இதில் கூடுதலாக புழுங்கல் அரிசி மீதான சுங்க வரியை 10 % இருந்து பூஜ்ஜியமாகக் குறைத்த சில மணி நேரங்களுக்குள், வெள்ளை அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) ரத்து செய்தது. மேலும், உயர் மட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இது முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Export tax on rice to come into effect from today Central government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->