ஆங்கிலவழி கல்வி - தற்கொலைக்கு சமம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


ஆங்கில வழி பள்ளிகள் மீது தற்போதைய பெற்றோர்களின் மோகம் என்பது, தற்கொலைக்கு சமமானது என்று என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் தெரிவித்திருப்பதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக ஏழ்மை நிலையிலிருந்து ஓரளவுக்கு முன்னேறிய சமூகத்தை சேர்ந்தவர்கள், தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில் விருப்பம் காண்பிப்பதில்லை. மாறாக பல லட்சங்களை கொட்டி ஆங்கில வழி கல்வியில் பயிலவே விருப்பப்படுகின்றனர்.

இன்னும் சொல்ல போனால் அரசு பள்ளிகளில் ஹிந்தி வேண்டாமென்று முழக்கமிட்ட, முழக்கமிடும் 90% அரசியல் புள்ளிகள், தங்களது பிள்ளைகளை CBSC (மத்திய அரசின் கல்வி திட்ட பள்ளி - ஹிந்தி கட்டாயம்) பள்ளிகளிலேயே சேர்க்கின்றனர். 

இதனை பார்த்து தனது பிள்ளைகளையும் ஆங்கில மொழி வழி, CBSC பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று, சில பெற்றோர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் முயன்று, சமாளிக்க முடியாமல், கடன் வாங்கி, இரவு பகலாக உழைத்து, உடலை வருத்திக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் தினேஷ் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தற்போது உள்ள பெற்றோர்கள் ஆங்கில வழி கல்வி மீது மோகம் கொண்டுள்ளனர். போதுமான ஆசிரியர்கள், சரியான பயிற்சி இல்லை என்றாலும், தங்களது குழந்தைகளை அதுபோன்ற பள்ளிகளுக்கு அனுப்பவே பெற்றோர்கள் விரும்புகின்றனர். இது தற்கொலைக்கு சமமானது. 

இதனால்தான் தேசிய கல்விக் கொள்கை தாய் மொழி வழியில் கற்பிக்கப்படுவதை வலியுறுத்தி வருகிறது. தற்போது 121 மொழிகளில் பிரைமர்களை உருவாக்கி வருகின்றோம். இந்த ஆண்டு இது தயாராக இருக்கும். 

நம் நாட்டைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் முதலில் திணறுவோம். அங்கு தான் நாம் அறிவு இழப்பதாக நினைப்போம். ஆனால் மொழி ஒரு செயல்படுத்தும் காரணியாக இருக்க வேண்டுமே, தவிர அது நம்மை முடக்க கூடாது. 

மேலும் மாணவர்களுக்கு கற்றல் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும். மாறாக கல்வி கற்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது. இது அவர்களை கல்வியில் இருந்து விலகிக் கொண்டு சென்று விடும். நாம் புதுமையான முறையில் சிந்திக்க உதவும் அனுபவ கல்வியை நாம் பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

English medium schools suicide NCERT Parents


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->