'ஸ்டார்லிங்க்' இணைய சேவை; இந்தியாவில் கட்டணத்தை நிர்ணயம் செய்த எலான் மஸ்க்; ஒரு மாதத்திற்கு இவ்வளவா? - Seithipunal
Seithipunal


'ஸ்பேஸ் எக்ஸ்', 'டெஸ்லா 'உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் முன்னணி பணக்காரருமான எலான் மஸ்க், விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான 'ஸ்பேஸ்'எக்ஸ்', ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவைகளை வழங்கி வருகிறார். 

தற்போது 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையசேவை, இந்தியாவிலும் விரிவடைந்துள்ள நிலையில், நாட்டின் தகவல் தொடர்பு சந்தையில் பரந்த அளவில் நுழைவதற்குத் அந்நிறுவனம் தயாராகியுள்ளது.

குறித்த செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவில் செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் கட்டணம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, 'ஸ்டார்லிங்க்' செயற்கைகோள் இணையசேவை இந்தியாவிற்கான அதன் மாதாந்திர குடியிருப்புத் திட்டத்தின் விலையை முறையாக வெளியிட்டுள்ளது. மாதாந்திர குடியிருப்புக் கட்டணமாக ரூ.8,600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Hardware கட்டணம் ரூ.34,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்டார்லிங்கின் இணையச் சேவையை சோதனை அடிப்படையில் 30 நாட்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புத் திட்டத்திற்கான விலை நிர்ணயம் தற்போது வெளியிடப்பட்டிருந்தாலும், வணிக சந்தா தொடர்பான தகவல்களை அது தெரிவிக்கவில்லை. அது, இறுதி செய்யப்பட்ட பின்னர், வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த மாதாந்திர குடியிருப்புத் திட்ட கட்டணத்தில், அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், 99.9% க்கும் அதிகமான இயக்க நேரத்தை வழங்கும் வகையில் செயல்படக்கூடியதாகவும் 'ஸ்டார்லிங்க்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் இணைப்பைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு உபகரணங்களை மட்டுமே செருக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம், 'ஸ்டார்லிங்க்' நிறுவனம் இந்தியாவில் ஆட்சேர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk sets the price of Star Link internet service in India


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->