பெங்களூர் - மைசூர் : இன்று முதல் மின்சார பேருந்து சேவை தொடக்கம்.!
electric bus service start in banglore to mysore
கா்நாடக மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், டீசல் மற்றும் பெட்ரோல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு மாநில அரசு முடிவு செய்தது.

இதில், முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் மின்சார பேருந்து சேவையை தொடங்குவதற்கு திட்டமிட்டது.
அதற்காக நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து ராமநகர் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மின்சார பேருந்துகளை வெளி மாவட்டங்களுக்கு இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்தது. இந்த நிலையில் பெங்களூரு-மைசூரு இடையே கே.எஸ்.ஆர்.டி.சி.யின் முதல் மின்சார பேருந்து சேவை இன்று தொடங்க உள்ளது.
இந்த பேருந்தில் ஒரு இருக்கைக்கும், மற்றொரு இருக்கைக்கும் 12 மீட்டர் இடைெவளியில் தாராளமாக அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைந்துள்ளது இதில், மொத்தம் 43 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம்.
இந்த பேருந்து சேவைக் குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் அன்புகுமார் தெரிவித்ததாவது, 'இந்த மின்சார பேருந்து பெங்களூரு - மைசூருக்கு இடையே இயக்கப்படும். இந்த பேருந்தில், எந்தவித இரைச்சல் சத்தமும், மாசும் இல்லாமல் உயர்தர வசதியுடன் மக்கள் பயணம் செய்யலாம்.

இந்த மின்சார பேருந்தில், ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பேருந்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 320 கிலோ மீட்டர் வரை இயக்கலாம். இந்த சேவையின் முதல் கட்டமாக இந்த மாத இறுதிக்குள் 20 பேருந்துகள் இயக்கப்படும். மீதமுள்ள பேருந்துகள் அடுத்த மாதம் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
electric bus service start in banglore to mysore