தேர்தல் நடத்தை விதிமீறல் : காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இருகட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் மாறிமாறி புகாரளித்தன.

பிரதமர் மோடி பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியையும் , ராகுல் காந்தி பேசியதாக பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. இதுதொடர்பாக 29ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்குமாறு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணையம். காங்கிரஸ் கமிட்டி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவும் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election rules breaked bjp and congress election commission notice


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->