முன்னாள் முதல் மந்திரிக்கு தேர்தல் ஆணையம் திடீர் நோட்டீஸ்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கு இடையே கடந்த ஐந்தாம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.எஸ்.ஆர் தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நாய்களின் மகன்கள் எனவும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு 500 போனஸ் வாங்காவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டையை கடிக்க நேரிடும் எனவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

 

சந்திரசேகர ராவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில் புகாரின் அடிப்படையில், வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என சந்திரசேகரராவுக்கு தேர்தல் ஆணையம் திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும் குறிப்பிட காலத்திற்குள் அவரிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கபடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission Notice to Telangana ex CM


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->