மொழிப்போர் வீரர்களின் நினைவாக தாளமுத்து நடராசன் சிலைகள் திறப்பு விழா! - முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் - Seithipunal
Seithipunal


மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை மூலகொத்தள அருகே உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும், மூலக்கொத்தளத்தில் இருந்து தொடங்கி, முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, மு.பெ. சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், கலாநிதி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் மூர்த்தி, எபிநேசர், சென்னை மேயர் ப்ரியா, முன்னாள் எம்.எல்.ஏ. க.ரங்கநாதன், புழல் நாராயணன் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

இந்த பேரணியில் அனைவரும் தாளமுத்து, நடராசன், டாக்டர் தருமாள்பாள் உருவப்படங்களுக்கு மலர் தூவி வணங்கி, மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு “வீர வணக்கம்! வீர வணக்கம்!” என்று முழக்கமிட்டனர்.

முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் கருப்பு பேண்ட் சட்டை அணிந்து அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இதன்பின், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகம் வளாகத்தில், தாளமுத்து–நடராசன் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு, முதலமைச்சர் நேரில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் பல பகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

statues Thalamuthu and Natarajan heroes language movement unveiled Chief Minister Stalin paid his respects


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->