டிரைவர் போட்ட பிரேக்கால் சறுக்கி சென்று பேருந்து! கால்வாயில் கவிழ்ந்ததில் 8 பேர் பலி! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் கனமழை பெய்து நிலையில் முக்த்சார்-கோட்காபுரா சாலையில் ஜம்பேல்வாலி கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் சறுக்கிக் கொண்டு சென்ற பேருந்து அங்கிருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தேசிய மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த துயர சம்பவம் குறித்து முத்த்சார் மாவட்ட துணை ஆணையர் கூறுகையில் "கனமழையின் காரணமாக கால்வாயில் அதிக நீரோட்டம் இருந்ததால் சில பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். 

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து கிரேன் உதவியுடன் எடுத்தபோது படுகாயத்துடன் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார். பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் வலியனைக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eight person died in bus overturns in canal in Punjab


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal