டெல்லியில் அதிர்ச்சி - நடந்துச் சென்ற சிறுவனை அடித்துக் கொன்ற கும்பல்.!  - Seithipunal
Seithipunal


டெல்லியில் அதிர்ச்சி - நடந்துச் சென்ற சிறுவனை அடித்துக் கொன்ற கும்பல்.! 

நாட்டின் தலைநகரான டெல்லியில் சங்கம் விஹார் பகுதியில் உள்ள தெருவில் நேற்று மாலை பதினெட்டு வயது சிறுவன் ஒருவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த சிறுவனை எட்டுக்கும் மேற்பட்ட சிறுவர்களை கொண்ட ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. 

உடனே அந்தக் கும்பல் சிறுவனை சரமாரியாகத் தாக்கியது. இதில், வலி தாங்க முடியாத அந்தச் சிறுவன் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்ற போதும் அவர்கள் விடாமல் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வலித் தாங்க முடியாமல் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். அதன் பிறகு அந்த கும்பல் அவனை விட்டுவிட்டு அங்கிருந்து நடந்து சென்றது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தாக்கிய எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight peoples arrested for kill boy in delhi


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->