70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி.. வாழ்த்துக்கள் கூறிய எடப்பாடி பழனிசாமி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் 70-வதுது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட அம்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தால் நாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாடி நிகழ்ச்சிகளில் பாஜகவினர் பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலேயே ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் பிரதமர் மோடி பல ஆண்டுகள் நாட்டிற்கு சேவை ஆற்ற கடவுள் அருள் புரியட்டும் என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy wish for pm modi


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal