தேர்தலில் களமிறங்க 18+ வயதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்.!! பாஜகவின் பரிந்துரை நிராகரிப்பு.!!
EC rejected 18 year old candidate from contesting parliamentary elections
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு தேர்தல்கள் குறித்த சில பரிந்துரைகளை நேற்று வெளியிட்டுள்ளது. தேர்தல்களில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலை குழு விவாதத்திற்கு பிறகு பரிந்துரைக்கப்பட்டது.

கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிமய பல நாடுகளில் உள்ள தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகு தேர்தலுக்கான வயது வரம்பை 18ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு வெளயிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் எதிராக நின்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மிகப் பெரிய பொறுப்புள்ள பதவிகளில் அமர்வதற்கான எந்தவித அனுபவமோ முதிர்ச்சியோ 18 வயதில் இருக்காது என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்து நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
EC rejected 18 year old candidate from contesting parliamentary elections