குஜராத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
Earthquake in Gujarat today
குஜராத்தில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் பாவ்நகர் பகுதியில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 21.081 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.675 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
English Summary
Earthquake in Gujarat today