மணிப்பூரில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நேற்று (திங்கள்கிழமை) இரவு 07:12 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது மணிப்பூரில் உள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மேற்கு வடமேற்கு திசையில் 79 கிலோ மீட்டர் தொலைவிலும், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் மணிப்பூரில் உள்ள தௌபால் என்ற பகுதியில் இரவு 9.30 மணியளவில் 3.3 ரிக்டர் அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake hits Manipur Bishnupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->