அந்தமான் நிக்கோபார் தீவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!!
earthquake for andaman and nicobar islands
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
அந்தமான் நிகோபார் தீவின் திக்லிபூர் நகரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு தென்கிழக்கு பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 32 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
English Summary
earthquake for andaman and nicobar islands