குடிபோதையில் பெண் நோயாளியை தாக்கிய டாக்டர்.! சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெர்வானி கிராமத்தில் வசித்து வருபவர் ஷியாம் குமார். இவரது தாய் சுக்மதிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவசர எண் 108 மற்றும் 112-ஐ தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். 

ஆனால், நாங்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என அவருக்கு தெரிவித்ததால், உடனடியாக ஆட்டோ ஒன்றில் ஷியாம் குமார் தாயாரை ஏற்றி கொண்டு கோர்பா மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

இதையடுத்து அவரது தாயாருக்கு டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்தபோது, திடீரென அவரை அடித்து உள்ளார். தனது தாயாரை டாக்டர் அடிப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த ஷியாம் அவரை தடுத்துள்ளார். அதற்கு, நீ அமைதியாய் இரு என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஷியாமின் தாயாரை டாக்டர் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும் இந்த சம்பவத்தின்போது, டாக்டர் குடிபோதையில் இருந்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த டாக்டருக்கு எதிராக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் அவினாஷ் மேஷ்ராம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunk doctor beat female patient in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->