குடிபோதையில் தகராறு! பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆட்டம் போட்ட இரண்டு பேருக்கு தகராறு ஏற்பட்டு ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலம் கர்லபுடியில் கடந்த 7-ம் நாளன்று கிராம மக்கள் விநாயகர் சிலையை வைத்து ஆடி பாடி, பூஜை செய்து வழிபட்டனர். இதற்கிடையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சந்திரய்யா என்பவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். அதில் குடிபோதையில் சந்திரய்யா இருந்து உள்ளார்.

அப்போது அந்த இடத்துக்கு வந்த சூர்யகுமார் என்பவர் ஒரு பாட்டிலலில் பெட்ரோல் நிரப்பப்பட்டு, தனது கைகளில் ஒரு தண்ணீர் பாட்டிலும் வைத்து இருந்தார். சந்திரய்யா மீது தன்னிடம் இருந்த தண்ணீரை சூர்யகுமார் தெளித்துள்ளார். இதனால், இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சூர்யகுமார் சந்திரய்யா மீது தன்னிடம் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதில் அவர் உடல் தீ பற்றி கருகியது.

இதனை பார்த்த அங்கு உள்ளவர்கள் சந்திரய்யாவை மீட்டு  திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு, சிகிச்சை பலனின்றி சந்திரய்யா உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் சூர்யகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை நிகழ்த்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drunk dispute Pour gasoline and burn Police investigation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->