குடியரசுதினம் : டெல்லியில் ட்ரோன்கள் பறக்கத் தடை.!  - Seithipunal
Seithipunal


வருகிற 26-ந் தேதி நாட்டின் 72-ம் ஆண்டு குடியரசுத் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மிகப்பிரமாண்டமாக கொண்டாடும் வகையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், டெல்லியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

"குடியரசு தினவிழா  கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் டிரோன்கள், பாராகிளைடர்கள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்கள் போன்றவற்றை பறக்கவிட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தக்கூடும். 

இதை நினைவில் கொண்டு, குடியரசுத் தினத்தின் போது, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டார்கள் மற்றும் ஏர் பலூன்கள் போன்றவற்றை பறக்கவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை கடந்த 18-ந் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வரை மொத்தம் இருபத்தொன்பது நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடையை மீறி, யாராவது இந்த எலக்ட்ரானிக் பொருட்களை பறக்கவிட்டால், இந்திய தண்டனை சட்டத்தின் 188-வது பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drones banned flying in delhi for republic day


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->