ஓட்டுநரின் தூக்கமயக்கமா...? நான்கு வழிச்சாலையில் அதிகாலை பயங்கரம்...! நெல்லை அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து...! - Seithipunal
Seithipunal


கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் நோக்கி பயணித்த தனியார் ஆம்னி பேருந்து, நெல்லை அருகே இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.அதிகாலை நேரத்தில் பொன்னாக்குடி பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராத விதமாக பலத்த வேகத்தில் மோதியது.

மோதலின் தாக்கத்தால் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.இந்த விபத்தில் சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓட்டுநரின் தூக்கமயக்கம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது அதிவேகப் பயணம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்தாரா என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக நெல்லை - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சேதமடைந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Driver drowsiness Early morning terror four lane highway Omni bus collides lorry near Nellai causing serious accident


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->