கனவு வீடு... காகிதம் போல் சுவர்...! -பென்சிலால் துளைப்பட்ட நொய்டா வீடு வைரல்
Dream house Walls like paper Noida house pierced with pencil goes viral
பொது மக்கள் தங்கள் கனவு இல்லத்தை கட்டுவதற்காக ஏராளமான பணத்தை, சில லட்சங்களில் இருந்து கோடிகள்வரை,செலவழித்து மனதில் ஒரு சின்ன சுவாசம் வாங்குவார்கள்.
ஆனால் சிலர் அந்த நம்பிக்கையையே சிதைத்து விடுகிறார்கள்,கட்டுமானம் தரமின்றி, பொருட்கள் குறைந்த தரத்தில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே வருகின்றன.அத்தகைய ஒரு அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் வெளிவந்துள்ளது.

அங்கு ரூ.1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வீடு, தரமின்மையின் சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.வீட்டு உரிமையாளர் கபீர் என்ற இளைஞர், தனது “கனவு வீடு” எவ்வளவு மோசமாக கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, அதிர்ச்சிகரமான ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ஒரு பென்சிலை எடுத்துக் கொண்டு சுவற்றில் சுத்தியலால் மெதுவாக தட்டுகிறார். ஆனால் அதிர்ச்சி என்னவென்றால், அந்த பென்சிலே சுவற்றை துளைத்துவிடுகிறது.
அந்த காட்சி இணையத்தில் தீப்பற்றி பரவியது போல வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் “ரூ 1.5 கோடி வீட்டின் சுவர் இவ்வளவு பலவீனமா?” என ஆச்சரியத்தில் மூழ்கினர். சிலர், “இது நகைச்சுவை இல்லை, நம் நாட்டில் பல இடங்களில் இதே நிலை!” என்றும் கருத்து தெரிவித்தனர்.
மற்றொரு பயனர், “இந்த வீடியோ ஒரு எச்சரிக்கை மணி. வீடு கட்டும் போது ஒவ்வொரு கட்டுமான பணியையும் நேரில் கண்காணிப்பது அவசியம் என்பதை இது நினைவூட்டுகிறது” என பதிவு செய்துள்ளார்.
English Summary
Dream house Walls like paper Noida house pierced with pencil goes viral