குரங்கு தொல்லைக்கு அதிரடி தீர்வு: கருத்தடை அறுவை சிகிச்சை... நெற்றியில் ‘திரிசூலம்’ பச்சை குத்தி கண்காணிப்பு...!
drastic solution monkey problem sterilization surgery tattoo forehead and surveillance
தெலுங்கானா மாநிலத்தின் நிர்மல் மாவட்டம் சாரங்கபூர் மண்டலத்தில் குரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, கிராம மக்கள் நாள்தோறும் அவற்றின் தொல்லையால் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.
வீடுகள், தோட்டங்கள், சந்தைகள் என எங்கும் குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காணும் வகையில், வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவத்துறை இணைந்து குரங்குகளுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக 3 வயதிற்கு மேற்பட்ட குரங்குகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பின், மீண்டும் அவற்றை எளிதில் அடையாளம் காணும் பொருட்டு, குரங்குகளின் நெற்றியில் திரிசூல வடிவில் நிரந்தர பச்சைக் குத்து இடப்படுகிறது.
இந்த அடையாளம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என கால்நடை மருத்துவர் டாக்டர் ஸ்ரீகர் ராஜு தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 1,650 குரங்குகள் இந்த சிகிச்சை மற்றும் பச்சைக் குத்து மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
English Summary
drastic solution monkey problem sterilization surgery tattoo forehead and surveillance