ரெயில் சக்கரத்தில் சிக்கிய நாய்! திறமையாக செயல்பட்ட ரெயில்வே ஊழியர்கள்!
Dog stuck in train wheel Railway staff acted skillfully
வந்தே பாரத் ரெயில் ஆந்திரா விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.இது சிராலா ரெயில் நிலையத்தை கடந்து வந்தபோது திடீரென நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்தது.

வேகமாக வந்த ரெயில் மோதியதில் நாய் ரெயில் சக்கரத்தில் சிக்கியது.இதன் காரணமாக வந்தே பாரத் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
அங்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்தை பார்த்தபோது சக்கரத்திலுள்ள நட்டு உடைந்து சேதம் அடைந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை ரெயில்வே நிபுணர்களின் ஆலோசனை பெற்று ஊழியர்கள் நட்டை மாற்றி சரி செய்தனர்.அதன் பிறகு 30 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
English Summary
Dog stuck in train wheel Railway staff acted skillfully