டாக்டர் ராமதாஸை வியக்க வைத்த நடிகர்.! ரியல் ஹீரோ என்றால் இவர் தான்.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் இந்திய அரசின் சார்பில் மாஸ்கோவுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் ரஷ்யாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள், தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக சோனு சூட் தனி விமானத்தை ஏற்படுத்தி, மாஸ்கோவிற்கு அனுப்பி மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார். இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து நேற்று பிற்பகல் புறப்பட்டு, இரவு நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளது. 

இந்த விமானத்தில் பாதுகாப்பாக தாயகம் திரும்பிய 90 க்கும் மேற்பட்ட மாணவர்கள். நடிகர் சோனு சூட்டிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர். நடிகர் சோனு சூட் துவக்கத்திலிருந்தே ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும், ஊர் திரும்ப முடியாமல் தவித்த வெளிமாநில தொழிலாளர்களுக்கும் பெரும் உதவியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்" ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த பல வாரங்களாக தவித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை இந்தி திரைப்பட நடிகர் @சோனுசூட் சொந்த செலவில் தனி விமானம் அமர்த்தி சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது தொடர் சேவை வியக்க வைக்கிறது. பாராட்டுகள்!" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor ramadhoss wishes sonusood


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal