விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..1
District Collector Announces Relief of rs5 Lakhs Each to Families of Those Who Died in the Virudhunagar Firecracker Factory Explosion
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடுத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர வெடி விபத்தில் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்துள்ள மூன்று பெண்கள் ஒரு ஆண் உட்பட நான்கு பேரில் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்பட முடியவில்லை. இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஈஸ்வரி அவரது கணவர் முத்துமாணிக்கம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் கோவிந்தராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று நள்ளிரவு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார்.
அதேநேரம், போலீசார் இந்த விபத்து குறித்து கூறுகையில், 'வெடிபொருட்கள் கலவைகளை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துச் சென்று பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதிகப்படியான வெடிபொருள்கள் கலவைகளை மருந்து கலக்கும் அறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனால், விபத்து ஏற்பட்டு 25 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.' என்று குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலை நிர்வாகம் தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.05 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 05 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.02 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.01 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களை தேடி வருகிறோம் எனவும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை முறையாக கண்காணிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
English Summary
District Collector Announces Relief of rs5 Lakhs Each to Families of Those Who Died in the Virudhunagar Firecracker Factory Explosion