எடப்பாடி பழனிசாமியை சட்டசபைக்கே போக விடக்கூடாது: அஇபுதமமுக சசிகலா ஆவேசம்..! - Seithipunal
Seithipunal


அஇபுதமமுக தலைவர் சசிகலா, வேலூர், குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் அஇபுதமமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் முன் பேசுகையில் கூறியதாவது;

துரோகி கட்சி ரூ.10 ஆயிரமும், பிரிட்ஜ் தருவதாக கூறியிருக்கிறது. இதை எப்படி நிறைவேற்றுவார்கள். கடன் வாங்கித்தான் அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இப்போதே தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.2.50 லட்சம் கடன் உள்ளது என்று கடுமையாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி என்ன பண்ணினார் என்றே தெரியவில்லை என்றும், அவர ஜெயிக்க வைத்த தொகுதி மக்களுக்கே எதுவும் செய்யவில்லை. இந்த மாதிரி ஆளுங்களை சட்டசபைக்கே போக விடக்கூடாது. மக்கள் பிரச்சினையை பேசாமல், வெளிநடப்பு செய்துகொண்டு இருந்தால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala asserts that Edappadi Palaniswami should not be allowed to even enter the Legislative Assembly


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->