விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை விதிப்பு; டிஜிசிஏ ஆலோசனை; காரணம் என்ன..?
DGCA advises on ban on carrying power banks on flights
கடந்த 19-ஆம் தேதி டில்லியில் இருந்து திமாப்பூருக்கு கிளம்ப இருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் வைத்து இருந்த லித்தியம் பேட்டரியில் ஆன பவர் பேங்க் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனடியாக ஊழியர்கள் அதனை அணைத்தனர்.
ஆனால், இதனால், யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில், இனிவரும் காலங்களில் பவர் பேங்கை விமானங்களில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது குறித்து டிஜிசிஏ ஆலோசனை நடத்தி வருகிறது.
அத்துடன், விமானத்தில் பவர் பேங்க்குகளை பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எப்படி கையாள்கின்றனர் என்பது குறித்தும் டிஜிசிஏ விசாரணை மற்றும் ஆய்வு நடத்தியது. இதனைத் தொடர்ந்து, விமானங்களில் பவர் பேங்க்குகளை பயன்படுத்துவது அல்லது தடை விதிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் இந்த முடிவு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
English Summary
DGCA advises on ban on carrying power banks on flights