கர்நாடகாவை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சல்!...தொற்றுநோயாக அறிவித்து அபராதம் விதிப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. தொடர்ந்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சலில்  இருந்து பொதுமக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இருந்த போதிலும் அங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் அங்கு மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் பரவாமல் தடுக்க தேவையற்ற இடங்களில் உள்ள நீரில் கொசு உற்பத்தியாவதை தடுக்க வேண்டும், சுகாதாரம் பேண வேண்டும், இருசக்கர வாகனங்களின் டயர்களில் மழைநீர் தேங்காமால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dengue fever shaking Karnataka Declared epidemic and fined


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->