டெல்லி | சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதியை கண்டித்து சாமியார்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

சனாதனத்தை கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா போன்றவற்றுடன் ஒப்பிட்டு பேசிய அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு வந்தது. 

அவருக்கு எதிராக பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். பல்வேறு மாநில காவல் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சமாதான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்பினர் சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடந்தது. 

இந்த பேரணியில் டெல்லி மட்டுமல்லாது சுற்றியுள்ள மாநிலமான அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இந்து மத சாமியார்கள் இந்துமத அமைப்பினர் 1500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டு தமிழ்நாடு இல்லத்தை சென்று அதன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் போது உருவ பொம்மைகளுக்கு தீ வைத்து எரித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

இதனால் தமிழ்நாடு இல்லம் முன்பு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி பேரணிச் சென்ற சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Sanatana Controversy Preachers protest against Minister Udayanidhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->