டெல்லி கார் குண்டுவெடிப்பு வீடியோ வெளியானது!
Delhi Red port car bomb blast video
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (நவம்பர் 10) மாலை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சதிச் செயல் சந்தேகம்:
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் சதிச் செயலாக இருக்கலாம் என வலுவான சந்தேகம் எழுந்த நிலையில், டெல்லி காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. தேசியப் புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசியப் பாதுகாப்புக் குழு (NSG) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
வெளியான வீடியோ:
சம்பவம் நடந்த போது பதிவான ஒரு புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின்படி, நேற்று மாலை சரியாக 7.02 மணிக்கு கார் வெடிப்பு நிகழ்ந்தது பதிவாகியுள்ளது.
கார் வெடித்தவுடன் மிகப்பெரிய அளவில் தீப்பிழம்புகள் எழுந்ததும், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்ததும் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
கார் உரிமையாளர் மருத்துவர் முகமது உமர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு, இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Delhi Red port car bomb blast video