விவசாயிகள் பேரணியால் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பலத்த பாதுகாப்பில் போலீசார்!
Delhi Motorists suffering from farmers rally
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் டெல்லி, நொய்டா சில்லா எல்லை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் எல்லைப் பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு விவசாய சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் டெல்லியை நோக்கி தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர்.
English Summary
Delhi Motorists suffering from farmers rally