டெல்லி || பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!   - Seithipunal
Seithipunal


டெல்லி பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரியில், கடந்த 14-ம் தேதி தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் பிற கல்லூரி மாணவிகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கல்லூரியில் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அதன் நுழைவு வாயில் மூடப்பட்டது. இருப்பினும், ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரியின் சுவர் மேல் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும், அந்த மாணவர்கள் ஆபாச கோஷங்களை எழுப்பி முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi miranda house womans college depavali celebration


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->