ஐஆர்எஸ் அதிகாரியின் மகள் கொலை: குற்றவாளி குறித்து அதிர்ச்சி தகவல்கள் - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஐஆர்எஸ் அதிகாரியின் 22 வயது மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகுல் மீனா, அந்த வீட்டில் முன்பு வேலை செய்திருந்த நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் 8 மாதங்கள் அந்த வீட்டில் வேலை பார்த்ததால், வீட்டின் அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்திருந்தார்.

நிதி முறைகேடு குற்றச்சாட்டின் காரணமாக ஒரு மாதத்திற்கு முன்பு வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அந்த வீட்டை குறித்து தகவல்கள் அனைத்தும் அவருக்கு தெரிந்திருந்தது.

சம்பவம் நடந்த நாளில், பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தை முன்கூட்டியே கவனித்து, மாற்றுச் சாவி பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அப்போது மேல்தளத்தில் இருந்த இளம்பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு தனது உடைகளை மாற்றி, யாருக்கும் சந்தேகம் வராமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், இந்த குற்றத்திற்கு முன்பும் அவர் ராஜஸ்தானில் மற்றொரு குற்றச்செயலில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், விசாரணையில் பலமுறை தனது வாக்குமூலத்தை மாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் நம்பிக்கை வைத்து வேலைக்கு எடுத்த நபர் மூலம் இப்படியான குற்றம் நடந்தது குறித்து பெரும் அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய கவலையையும் எழுப்பியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi IRS Offi daughter murder case


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->