சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


இணையத்தில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சு ஜனதா கட்சி மத்திய அரசுக்கு எதிராகவும், நீட்  தேர்வு வினாத்தாள் சசிவு காரணமாகி கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக கோரியும் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்  சோனம் வாங்சுக்வும் கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் நேற்று காலை டெல்லி போலீசார்  அவரை அதிரடியா தூக்கி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து தான் விரும்பும் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதாவது, சஃப்தர்ஜங் மருத்துவமனை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மேலும் மோசமடைவதற்கு முன்பாக அவரைத் தான் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற விரும்புவதாகவும் அவரின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றியது தன்னிச்சையான முடிவு அல்ல, அது ஒரு மருத்துவ ரீதியான முடிவு என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அத்துடன், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தலையிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து, அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

''சோனம் வாங்சுக் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். லடாக்கில் அவர் 35 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. இதில் அரசின் தலையீடு தேவைப்படவில்லை.

நாங்கள் அவரை மேடான்டா அல்லது வேறு மருத்துவமனைக்கு மாற்ற விரும்பினோம். இது ஒரு அடிப்படை உரிமை. 30-40 போலீஸார் மற்றும் நீர்ப்பீச்சு வாகனங்கள் சூழ்ந்திருக்கும் சஃப்தர்ஜங் மருத்துவமனையை நாங்கள் விரும்பவில்லை. சோனமின் ரத்த அழுத்தம் முன்பு சுமார் 110/70 என்ற அளவில் இருந்தது. ஆனால், சப்தர்ஜங் மருத்துவமனையில் போலீஸாரின் நடமாட்டம் காரணமாக அது 125/85 ஆக உயர்ந்துள்ளது.

வாங்சுக் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினால் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்று அஞ்சியே அரசு அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் இல்லாத நிலையில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

முன்பு நாங்கள் தினமும் வாங்சுக்கின் உடல்நிலையை கண்காணித்து வந்தோம். ஆனால் நாங்கள் இங்கு வந்ததிலிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. உடனடியாகத் தகவல்கள் கிடைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நீதிமன்றம் பதிவு செய்துகொண்டுள்ளது. அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம்,'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi High Court rejects Sonam Wangchuks wifes plea to shift her to a private hospital


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->