மகரிஷி வால்மீகி ஜெயந்தி: நாளை தலைநகருக்கு விடுமுறை!
Delhi Govt Holyday
நாளை (அக்டோபர் 7) புது டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு, மகரிஷி வால்மீகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகரிஷி வால்மீகி ஜெயந்தி விழாவை முன்னிட்டு புது டெல்லியில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவுக் கூட்டங்களும் நடைபெற உள்ளன. இதில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிகவி என போற்றப்படும் மகரிஷி வால்மீகி, ராமாயணத்தை எழுதியவர் மட்டுமல்லாமல், இந்திய இலக்கணத்தின் முன்னோடியாகவும் அறியப்படுகிறார். சமத்துவம், நீதி, மனிதநேயம் ஆகியவற்றை சமூகத்தில் வலியுறுத்தியவர் என்றும் தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகரிஷி வால்மீகியின் சிந்தனைகள், மக்கள் வாழ்க்கையில் சமத்துவம், மரியாதை, ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்க வழிவகுத்துள்ளன என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். மேலும் தலித் சமூகத்தின் கல்வி, சம வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றை உறுதி செய்வதில் தில்லி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மகரிஷி வால்மீகியின் போதனைகள் சமூகத்தில் நீதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துகின்றன எனவும், இதனை நினைவுகூர சிறப்பு நிகழ்ச்சி டெல்லி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில், அவரது வாழ்க்கை, ஆளுமை, போதனைகள் குறித்து கலந்துரையாடல்களும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.