நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! களமிறங்குகிறார் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரி! துணை முதல்வர் அறிவிப்பு!   - Seithipunal
Seithipunal


டெல்லி வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி போலீஸ் வட்டாரங்கள் அறிவித்துள்ளது. 

டெல்லி வடகிழக்கு பகுதிகளில் நேற்று முதல் CAA ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கலவரம் வெடித்ததால், கடுமையான வன்முறையானது நடைபெற்று வருகிறது. இதில் ஒரு தலைமை காவலர் உட்பட இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் டெல்லியில் சட்டம்-ஒழுங்கை கவனிக்க சிறப்பு காவல் ஆணையர் ஆக ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீ வத்சவா நியமிக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். அதேபோல நாளை டெல்லி வடகிழக்கு பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், நாளை நடைபெறவிருந்த சிபிஎஸ்சி பொதுத்தேர்வை ஒத்திவைத்தும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi govt announced schools leave in northeast Delhi


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal