காணாமல் போன டெல்லி மாணவி சடலமாக மீட்பு! யமுனை நதியில் முடிந்த துயரம்!
delhi college student death
ஆறு நாட்களாக மாயமான 19 வயது டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத், யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த சினேகா, தெற்கு தில்லியின் பாற்யவரன் வளாகத்தில் தங்கியிருந்து தில்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ஜூலை 7ஆம் தேதி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது நண்பர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
விசாரணையில், சினேகா எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை குறிப்பு ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில், யமுனை ஆற்றின் பாலத்தில் இருந்து குதிக்கவுள்ளதாக எழுதப்பட்டிருந்தது.
தொடர்ந்து, சிக்னேச்சர் பாலம் அருகே சினேகாவை இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். இது சிசிடிவி மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களால் உறுதி செய்யப்பட்டது. பாலத்தின் மீது நின்ற ஒருவரைப் பார்த்ததாகவும், பின்னர் அவர்கள் காணாமல் போனதாகவும் சிலர் கூறினர்.
நிகம் போத் காட் முதல் நொய்டா வரை தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு, கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலம் மீட்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் சடலத்தை உறுதி செய்தனர்.
English Summary
delhi college student death