நாடாளுமன்றம் திறப்பு விழா எதிரொலியாக டெல்லி எல்லைகளுக்கு சீல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றம் திறப்பு விழா எதிரொலியாக டெல்லி எல்லைகளுக்கு சீல்.!

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என்பதாலும், போதிய இட வசதி இல்லாததாலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. 

இந்த புதிய நாடாளுமன்றத்தின் கட்டிட பணிக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி அடிக்கல் நாட்டினார். டாடா ப்ரொஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கட்டி வரும் இந்த நாடாளுமன்றம்  'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.

தற்போது இந்த புதிய பாராளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28-ந்தேதி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்கிறார். இந்த நிலையில், நாளை டெல்லி மாநகர எல்லைகளில் சீல் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றம் திறக்கப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், டெல்லியில் மல்யுத்த வீரர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

delhi borders sealed tomarrow for new parliament building open


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->