பாட்னாவில் அதிர்ச்சி: ஹோட்டல் அறையில் மனைவியுடன் தகராறு: மகனை அடித்துக்கொன்ற கொடூர தந்தை..!
Cruel father beats son to death after argument with wife in hotel room in Patna
பீகார் மாநிலம் பாட்னாவில் 06 வயது மகனுடன் தம்பதியினர் சுற்றிப்பார்க்க வந்துள்ள நிலையில், நேற்றிரவு பாட்னா ரெயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது.
இதன் போது ஆத்திரம் அடைந்த அந்த நபர், மனைவி மேல் உள்ள கோபத்தால் தனது மகனை சரமாரியாக அடித்து தரையில் வீசியுள்ளார். இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவத்திற்கு பின், சிறுவனின் தந்தை தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Cruel father beats son to death after argument with wife in hotel room in Patna