தெரு நாய்களுக்கு பயந்து மூன்றாவது மாடிக்கு ஓடிய பசு: கீழே வரமுடியாமல் தவிப்பு..!
Cow runs to the third floor in fear of street dogs
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரவிவர் பெத் பகுதியில் உள்ள பர்தேஷி வாடாவில் ஒரு பசு மாட்டை தெருநாய்கள் துரத்திச்சென்றதால் பயந்து போன பசு அங்கும் இங்கும் என மிரண்டு ஓடியுள்ளது. தொடர்ந்து நாய்கள் தொடங்கியதால் அந்த பசு அப்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு ஏறியுள்ளது.
மாடு கத்தும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் கட்டிடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால், குறுகிய மர படிக்கட்டில் மூன்றாவது மாடிக்கு ஏறியதால் பசுவால் மீண்டும் கீழே வர முடியவில்லை. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பசுவை மீட்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் எந்த முயற்சியும் பலனலிக்க வில்லை. இதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்வப இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் பசுவை மீட்க சில முயற்சிகளை செய்துள்ளனர். பின்னர் கடைசியாக கிரேன் மற்றும் பாதுகாப்பு பெல்ட்களைப் பயன்படுத்தி பசுவை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
English Summary
Cow runs to the third floor in fear of street dogs