பாதுகாப்புப்படையினர் சோதனை நடவடிக்கை...! - பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு, காஷ்மீர் பதட்டம்...! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மீண்டும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கிஷ்ட்வர் மாவட்டத்தின் சதுரு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருக்கிறார்கள் என்ற ரகசிய தகவல் பாதுகாப்புத்துறைக்கு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அப்பகுதியில் பெரும் அளவில் கூட்டு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.தேடுதல் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி சூடு நடத்தினர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.முழு பகுதியும் தற்போது பாதுகாப்புப் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. மோதல் இன்னும் தொடர்வதாகவும், நிலைமை மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Security forces conduct raids Terrorists open fire Kashmir tense


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->