ரூ.51 லட்சம் முறைகேடு வழக்கு.! வங்கி கேஷியருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் ரூ.51 லட்சம் முறைகேடு வழக்கில் வங்கி கேஷியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிந்தவர் நாராயண்சிங் மக்வானா(62). இவர் கூட்டுறவு வங்கியில் பொதுமக்களின் ரூபாய் 51 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக 2018ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நாராயண்சிங் மக்வானா பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், தனது வாடிக்கையாளருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கினால், அது சமூகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறி, பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த நாராயண்சிங் மக்வானாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court sentences bank cashier to life imprisonment for Rs 51 lakh embezzlement in madhya pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->