நாடு முழுவதும் இன்று அவசர கால ஒத்திகை..!! கொரோனாவுக்கு எதிராக தயாராகும் இந்தியா..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் பி.எப் 7 வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிலும் பிஎஃப் 7 வகை கொரோனா பரவல் தொடக்க நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக நாட்டில் மீண்டும் கொரோனா பேரிடர் நிகழாத வண்ணம் தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் நெருக்கடியான நேரத்தை சந்திக்க தயாராகும் வகையில் நாடு முழுவதும் என்று அவசர கால ஒத்திகை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகள், கொரோனா வார்டுகள், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எண்ணிக்கை, ஆக்சிஜன் கையிருப்பு, அவசரகால தடுப்பு மருந்துகள் போன்றவற்றை மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona emergency drills across India today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->