அதிகரித்த கொரோனா தொற்று.. மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை கட்டுக்குள் வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டது. இதனிடையே, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வருகிறது. டெல்லி, ஹரியானா ஆகியவற்றை ஒட்டி இருக்கும் உத்தரப் பிரதேச எல்லைக்குள் அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியம் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. 

உத்திரபிரதேசம் கவுதம் புத்தர் நகர் மாவட்டத்தில் 65 பேருக்கும், காசியாபாத் மாவட்டத்தில் 20 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இது குறித்து ஆராய உத்தரப்பிரதேச முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தை ஒட்டிய சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேசிய தலைநகர் பிராந்திய மாவட்டங்களிலும் தொற்று தென்படுகிறது. 

பாதிப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உடல்நிலை மோசமடைந்தது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும். தேசிய தலைநகர் பிராந்திய மாவட்டங்களான கவுதம் புத்தா நகர், காசியாபாத், ஹபூர், மீரட், புலந்த்சாகர், பாக்பட் ஆகிய ஆறு மாவட்டங்களிலும், தலைநகர் லக்னோ மாவட்டத்திலும் பொது இடங்களிலும் அணிவது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். 

நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் அடையாளம் கண்டறிந்து தடுப்பூசி போட செய்யவேண்டும். சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்த வேண்டும். நோய் அறிகுறிகளுக்கு உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona controls for up govt


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->