தடை செய்யப்பட்ட மோடியின் பிபிசி ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட்டது காங்கிரஸ்...!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த பொழுது கடந்த 2022 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது. "இந்தியா: மோடிக்கான கேள்விகள்" எனும் தலைப்பில் வெளியான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்திற்கும் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உள்ளதை வலியுறுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மோடியின் ஆவணப்படத்தை ட்விட்டரில் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது. மேலும் ஆவணப்படம் தொடர்பான லிங்குகளுடன் பகிரப்பட்ட 50க்கும் மேற்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை இன்று கேரள மக்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளது.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சங்குமுகம் கடற்கரையில் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று மாலை ஆவணப்படம் திரையிடப்பட்டது. மத்திய அரசு தடை விதித்தாலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான டெல்லி, தெலுங்கானா, மேற்குவங்கம், ஆகிய மாநிலங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. அந்த வரிசையில் இன்று கேரளாவில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress screens Modi BBC documentary in Kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->