சுற்றுச்சூழல் தரவரிசையில் இந்தியாவுக்கு கடைசி இடம்.. பா.சிதம்பரம் கடும் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


180 நாடுகளில் இடம்பெற்றுள்ள சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டுள்ளது.

180 நாடுகளில் இடம்பெற்றுள்ள சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசைப் பட்டியல், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதன்படி தனது ட்விட்டர் பக்கத்தில் "பா.ஜ.க. கூட்டணி அரசு தரவுகள் இல்லாத அரசு என நன்றாக அறியப்பட்டுள்ளது. தற்போது அது ஒத்திசைவு இன்மையை அனுமதிக்காத அரசாக உள்ளது. அதனால்தான் அது, 180 நாடுகளுடனான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் கடைசி இடத்தை பிடித்திருப்பதை நிராகரித்துள்ளது.

இதற்கு முன்பு கொரோனாவால் ஏற்பட்ட அதிகப்படியான இறப்பு பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை மற்றும் உலகளாவிய பட்டினி குறியீடு ஆகியவற்றையும் நிராகரித்துள்ளது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இசைக்கிற இசைக்கு உலகம் ஆடாது என்பதை மோடி அரசு உணர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress p Chidambaram speech about central govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->